அனேகன் படத்தில் சிம்புவை வம்புக்கு இழுத்த தனுஷ்!

சிம்பு-தனுஷ் மோதல் எல்லாம் முடிவுக்கு வந்து இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர். தற்போதெல்லாம் தனுஷ் எந்த பார்ட்டி வைத்தாலும் அதில் முதல் ஆளாக சிம்பு தான் இருக்கிறார்.

dhanush-simbu

ஆனால், தனுஷ் விரைவில் வெளிவரவிருக்கும் அனேகன் படத்தில் மறைமுகமாக சிம்புவை சீண்டி பார்த்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் நேற்று வெளியாகியுள்ளது.

இதில் டங்காமாரி என்ற பாடலில் ‘எனக்கு எதிர் யாரும் இல்லை, தற்போது நான் சோலோவாகிட்டேன்’ என்ற வரி வந்துள்ளது. சிம்பு படங்கள் வந்து சுமார் 2 வருடங்கள் ஆகிவிட்டது இதை சுட்டிக்காட்டும் விதமாக இந்த வரி அமைந்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.