கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் படம் அனேகன். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை அமிரா தஸ்தர் நடிக்கிறார்.
அனேகன் என்ற வார்த்தைக்கு இது நாள் வரை அர்த்தம் தெரியாமல் இருந்த ரசிகர்களுக்கு தற்போது விளக்கம் கிடைத்துள்ளது. திருவாசகத்தில் மாணிக்கவாசகர் ‘ஏகன் அனேகன் இறைவனடி வாழ்க’ என்று எழுதியிருக்கிறார்.
அதாவது ‘இறைவன் பலவாக இருக்கிறான், ஒருவன் அல்ல’ என்பதுதான் அவர் பயன்படுத்திய ‘அனேகன்’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்று கூறுகின்றனர்.
இப்படம் காதல்+ஆக்ஷன் கலந்த கதை என கே.வி. ஆனந்த் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியது குறிப்பிடத்தக்கது.