அனுமதிபத்திரம் இல்லாமல் மண் ஏற்றியவர்கள் மாட்டிக்கொண்டனர்

fineஅனுமதி பத்திரம் இன்றி இரண்டு உழவு இயந்திரத்தில் மண் ஏற்றிகொண்டு வந்த இரண்டு நபர்களை அச்சுவேலி பொலிஸார் கைது செய்து மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிலையில் நீதவான் குறித்த இருவருக்கும் தலா 5 ஆயிரம் ரூபா வீதம் 10 ஆயிரம் ரூபா அபராதமாக விதித்தார்.

இச் சம்பவம் நேற்று முன்தினம் நண்பகல் புத்தூர் கிழக்கு சொக்கத்திடல் பகுதியில் இடம்பெற்றுள்ளது. வழமையான ரோந்துப்பணியல் பொலிஸார் ஈடுபட்டிருந்த வேளையில் சந்தேகத்திடமான முறையில் மண் ஏற்றி வந்த இரண்டு உழவு இயந்திரங்களை சோதனையிட்ட போது அனுமதிப்பிரம் இன்றி மண் ஏற்றி வந்தது தெரியவந்தள்ளது.

இதனையடுத்து பொலிஸார் குறித்த இருவரையும் கைது செய்து மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரணை செய்த நீதவான் அனுமதிப் பத்திரம் இன்றி மண் ஏற்றி வந்த இரண்டு உழவு இயந்திரங்களின் மண்னை பறிமுதல் செய்ய உத்தரவுட்டதுடன் குறித்த இரண்டு நபர்களுக்கும் தலா 5 ஆயிரம் ரூபா வீதம் 10 ஆயிரம் ரூபா அபராதம் விதித்தார்.

Recommended For You

About the Author: Editor