அனந்தி சசிதரனினின் பாதுகாப்பை உறுதிசெய்ய அனைவரும் முன்வர வேண்டும் – மாவை

mavaiஇராணுவமும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் அரசாங்கமும் வடக்கு மாகாண சபை உறுப்பினரான அனந்தி சசிதரனின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளமை இந்த நாட்டில் ஜனநாயகம் செத்துவிட்டதை எடுத்துக்காட்டுகின்றது. எனவே அப் பெண்மணியின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைவரும் முன்வர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா தெரிவித்தார்.

வலி.தெற்கு பிரதெச சபையின் உள்ளுராட்சி வார நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்

வடக்கில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபை ஒன்று அமைக்கப்பட்ட பின்னரும் ஜனாதிபதி அங்த மாகாகண சபையின் நடவடிக்கைகளுக்குத் தடைகளைப் பிரயோகித்து வருகின்றார்.

இதேபோல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரே அதிகமாக அரசியல் பேசுகின்றார்.
வடக்கு மாகாகண சபையின் உறுப்பினரான திருமதி.அனந்தி சசிதரனையும் கைது செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் முற்பட்டுள்ளார்.

எனவே அனந்தியைப் பாதுகாக்க நாம் அனைவரும் ஒருமித்துக் குரல் கொடுக்க வேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்தி

காலம் கனியும்வரை காத்திருக்க முடியாது – முதலமைச்சர்