அதிகஸ்டம், கஸ்டப் பிரதேச அதிபர், ஆசிரியர்களுக்கான மேலதிக கொடுப்பனவு

வடமாகாண ஆளுநரின் அனுதியின் கீழ், வலயக் கல்வித் திணைக்கள கட்டமைப்புக் குழு, மாகாணக் கல்வித் திணைக்கள கட்டமைப்பு குழு ஆகிவற்றின் சிபாரிசுக்கு அமைவாக வட மாகாணத்தில் அதிகஷ்டம் மற்றும் கஷ்டப் பிரதேசங்களில் அமைந்துள்ள பாடசாலைகளில் கல்விகற்பிக்கும் அதிபர் ஆசியர்களுக்கு கொடுப்பனவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எதிர்வரும் ஜூன் மாதம் 01ஆம் திகதியிலிருந்து வழங்கப்படவுள்ள இந்தக் கொடுப்பனவினை, அதிகஷ்டப் பிரதேசத்திலுள்ள 363 பாடசாலை அதிபர் ஆசிரியர்களுக்கு ரூபா 2500 உம் கஷ்டப் பிரதேசத்தில் அமைந்துள்ள 138 பாடசாலை அதிபர், ஆசிரியர்களுக்கு ரூபா 1500 உம் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளன.

இதற்குத் தகுதியான பாடசாலைகளின் விபரங்கள் ஏற்கனவே வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன் தெரிவித்துள்ளார்.

தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களின் விபரம் வருமாறு…

school-details

Related Posts