அதிகரிப்பின் பின்னரான புதிய பஸ் கட்டண விபரம் இதோ!

business-money-develpment-cashதனியார் மற்றும் இபோச பஸ் கட்டணங்கள் இன்று (01) தொடக்கம் அதிகரிக்கப்பட்டுள்ளன.

7% பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் ஆகக்குறைந்த 9 ரூபா கட்டணத்தை தவிர ஏனைய கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி ஒரு ரூபா தொடக்கம் 46 ரூபா வரை பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

புதிய அதிகரிப்பின் பின்னரான கட்டண விபரம் இதோ…

12 – 27 ரூபாவரை 01 ரூபா அதிகரிப்பு
30 – 32 ரூபாவரை 02 ரூபா அதிகரிப்பு
34 – 48 ரூபாவரை 03 ரூபா அதிகரிப்பு
49 – 60 ரூபாவரை 04 ரூபா அதிகரிப்பு
62 – 75 ரூபாவரை 05 ரூபா அதிகரிப்பு
77 – 105 ரூபாவரை 07 அதிகரிப்பு
107 – 117 ரூபாவரை 08 ரூபா அதிகரிப்பு
118 – 142 ரூபாவரை 09 ரூபா அதிகரிப்பு
143 – 151 ரூபாவரை 10 ரூபா அதிகரிப்பு
152 – 160 ரூபாவரை 11 ரூபா அதிகரிப்பு
161 – 175 ரூபாவரை 12 ரூபா அதிகரிப்பு
177 – 186 ரூபாவரை 13 ரூபா அதிகரிப்பு
187 – 198 ரூபாவரை 14 ரூபா அதிகரிப்பு

சாதாரண பஸ்களில் 662 ரூபா என்ற அதி கூடிய கட்டணம் 46 ரூபாவால் அதிகரிப்பு
தெற்கு அதிவேக வீதியில் மஹரகம தொடக்கம் காலி வரை 500 ரூபா