அஜீத்தின் அடுத்த படத்தில் 2 கதாநாயகிகள்

அஜீத் என்னை அறிந்தால் படத்தை முடித்துள்ளார். கவுதம்மேனன் இயக்கிய இப்படத்தில் நாயகிகளாக அனுஷ்கா, திரிஷா நடித்துள்ளனர். ‘டப்பிங்’, ரீ ரிக்கார்டிங் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. விரைவில் பாடல்கள் வெளியீட்டு விழா நடக்க உள்ளது. பொங்கலுக்கு படம் ரிலீசாகும் என தெரிகிறது.

Ajith-Siruthai-Siva

இப்படத்தை தொடர்ந்து சிவா இயக்கும் படத்தில் நடிக்கிறார். ஏற்கனவே ‘வீரம்’ படம் இவர்கள் கூட்டணியில் வந்து வெற்றிகரமாக ஓடியது. வசூலும் குவித்தது. தற்போது மீண்டும் இணைகிறார்கள். இந்த பட வேலைகள் தற்போது துவங்கியுள்ளன.

‘வீரம்’ படம் கிராமத்து கதையம்சத்தில் வந்தது. இந்த படம் நகரம் சார்ந்த கதையம்சத்தில் உருவாகிறது.

இதில் அஜீத் ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். அதற்கான தேர்வு நடக்கிறது. படப்பிடிப்பு ஜனவரியில் துவங்குகிறது.