அஜித் படத்தில் மீண்டும் ‘ஆலுமா டோலுமா’

அஜித் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘வேதாளம்’ படத்தில் இடம்பெற்ற பாடல்தான் ‘ஆலுமா டோலுமா’. அனிருத் இசையில் அமைந்த இப்பாடல் படம் வெளிவருவதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படம் வெளிவந்த பிறகு, அந்த பாடலில் அஜித் ஆடிய விதம், அவருடைய கெட்டப் என அனைத்துமே ரசிகர்களை கவர்ந்தது.

ajith

இந்த பாடலுக்கு கல்யாண் மாஸ்டர் நடனம் அமைத்திருந்தார். இந்நிலையில், தற்போது அஜித் நடித்து வரும் ‘தல 57’ படத்திற்கும் அனிருத்துதான் இசையமைத்து வருகிறார். ஆகையால், இந்த படத்திலும் ‘ஆலுமா டோலுமா’ மாதிரி பாடல் அமைகிறதா? என்று தலைப்பை வைத்து நீங்கள் தப்புக் கணக்கு போடவேண்டாம்.

அந்த பாடலுக்கு நடனம் அமைத்த கல்யாண் மாஸ்டர் தற்போது ‘தல 57’ படத்திற்கும் ஒரு பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். அஜித், காஜல் அகர்வால் இணைந்து ஆடும் ஒரு டூயட் பாடலுக்கு இவர் நடனம் அமைத்துள்ளாராம். ஐரோப்பாவில் இந்த பாடலை படமாக்கியுள்ளனர்.

‘தல 57’ படக்குழு தற்போது ஐரோப்பாவில் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளது. இப்படத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், தம்பி ராமையா, கருணாகரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சிறுத்தை சிவா இயக்குகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

Recommended For You

About the Author: Editor