அசாத்சாலியின் விடுதலையை வலியுறுத்தி யாழில் போராட்டம்

tellippalaiஅசாத்சாலியின் விடுதலையை வலியுத்தி யாழ்ப்பாண முஸ்லீம்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றனை இன்று நவலர் வீதியில் உள்ள பள்ளிவாசலில் நடாத்தவுள்ளனர்.

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேஜர் அசாத்சாலி கடந்த வாரம் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரது விடுதலையினை வலியுறுத்தி யாழ்ப்பாண முஸ்லீம் மக்கள் இணைந்து துவாப்பிரார்த்தனையும் கவனயீர்ப்புப் போராட்டமும் இன்று பள்ளிவாசலில் மேற்கொள்ளவுள்ளனர்.

அதன்படி இன்று ஒரு மணியளவில் குறித்த போராட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.