அங்கஜன் கைதாகியதாக வந்த செய்தி வதந்தி!

அங்கஜன் அவுஸ்திரேலியாவில் கைது அவசரமாய் புறப்பட்டார் தந்தை இராமநாதன்..  என்ற செய்தி பல இணையங்களிலும் பிரசுரமாகியுள்ளது. இச் செய்தி தொடர்பில் அங்கஜன் தரப்பினைத் தொடர்பு கொண்டு வினாவிய போது இதுவொரு வதந்தி எனவும் இச் செய்தியில் எவ்வித உண்மையுமில்லை எனத் தெரிவித்தார் அவரின் ஊடக இணைப்பாளர்.

மேலும் அவர், அங்கஜன் எதிர்வரும் ஞாயிறு (8/12/2013) இடம்பெறவுள்ள தனது மாமனாரின் மரண இறுதிக்கிரியை ஏற்பாட்டுகளில் மும்முரமாக இருப்பதால் இவ் வதந்தி பற்றி கவனத்தில் கொள்ளவில்லை என்று கூறினார்.

மேற்படி இணைய ஊடகம் கடந்த வடமாகாண சபைத் தேர்தல் காலம் தொடக்கம், அங்கஜன் பற்றிய  அவதூறுகளையும், பொய்ச் செய்திகளையும் பரப்பி வந்தது எனவும் , அப்படிச் செய்யற்படாமல் இருக்க அந்த இணையத்தால் பேரம் பேசப்பட்டதாகவும்  அங்கஜன் தரப்பு அதை மறுத்ததாகவும் சொல்லப்படுகிறது. அதில் ஏற்பட்ட தனிப்பகை காரணமாக இந்த  நிறுவனம் தமக்குள்ள இணைய வலையமைப்பை பயன்படுத்தி இவ்வாறான பொய்ப் பரப்புரைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

தனிப்பட்ட பகையுணர்வுடன் இவ்வாறக நடந்து கொள்ளும் இந்த வியாபார நிறுவனத்தின் இணையத்தளங்களை ஒரு பரபரப்பிற்காக பார்வையிடும் மக்கள் செய்திகளின் நம்பகத்தன்மையை ஏற்பது குறைவாகையால் இது பற்றி நாம் அதிகம் அலட்டிக்கொள்வதில்லை என்றும் குறிப்பிட்டார்.