சம்பள முரண்பாட்டை நீக்குதல் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே ஊழியர்கள் கடந்த புதன்கிழமை நள்ளிரவு முதல் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் இன்றும் தொடங்குகிறது.

ரயில்வே திணைக்களத்தைச் சேர்ந்த ரயில் சாரதிகள், உதவியாளர்கள் , ரயில் நிலைய அதிபர்கள் , சமிஞ்ஞையாளர்கள், பாதுகாவலர்கள் என 15 ஆயிரம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இவர்கள் கடந்த 19 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை சட்டபடி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர். அதனை கைவிட்டு இப்போது தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
நேற்றைய தினம் ஆறு அலுவல ரயில்சேவையில் ஈடுபட்ட நிலையில் இன்றைய தினம் காலி, பொல்ஹாவெல, சிலாபம், மஹாவ மற்றும் கண்டிக்கிடையில் ஐந்து அலுவலக ரயில்கள் சேவையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.