அரச துறையின் 28 தொழிற்சங்கங்கள் சுகவீன விடுப்புப் போராட்டத்தை இன்று முன்னெடுத்துள்ளன.

இதனால் கடவுச்சீட்டு, தேசிய அடையாள அட்டை ஒருநாள் சேவை உள்பட பொதுச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச முகாமைத்துவ உதவியாளர் சங்கம், அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கள் உள்பட 28 தொழிற்சங்கங்கள் இன்று திங்கட்கிழமை சுகவீன விடுப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.