மீண்டும் வேலை நிறுத்தத்தில் குதிக்கும் அரசாங்க வைத்திய அதிகாரிகள்

நாடளாவிய ரீதியிலுள்ள அரசாங்க வைத்திய அதிகாரிகள் 24 மணித்தியால அடையாள பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

நாளை (புதன்கிழமை) காலை 8.00 மணி முதல் இப்பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இப்பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 4 வருடங்களாக குறித்த சங்கம் பல தடவைகள் இவ்வாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts