யாழ்.செம்மணி மற்றும் அதனை அண்டிய பகுதியிலுள்ள வீதிகளில் ‘ஆவா 001 இராஜ்ஜியம்’ என எழுதப்பட்டுள்ளமை மக்களிடத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்.செம்மணி மற்றும் அதனை அண்டிய பகுதியிலுள்ள வீதிகளில் ‘ஆவா 001 இராஜ்ஜியம்’ என எழுதப்பட்டுள்ளமை மக்களிடத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் குறித்த பதத்தை எழுதிய பின்னணியில் விபரீதம் ஏதும் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கலாமென்ற கோணத்தில் பொலிஸார் தீவிர விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
யாழில் ஆவா எனும் பெயரில் இயங்கும் குழுவொன்று வாள்வெட்டு சம்பவங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாக பொலிஸார் கூறி வருகின்றனர்.
அந்தவகையில் வாள் வெட்டுக்களில் ஈடுபட்டு வந்தவர்கள் எனவும் ஆவா குழுவை சேர்ந்தவர்கள் எனவும் சந்தேகத்தின் பேரில் பொலிஸார் பல இளைஞர்களை கைதுசெய்து, அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
மேலும் அவர்களுக்கு எதிராக வழக்கு விசாரணைகள் தற்போதும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது