கிணற்றிலிருந்து சிறுவனின் சடலம் கண்டெடுப்பு!

வவுனியா – நெடுங்கேணி பகுதியில் கிணற்றிலிருந்து சிறுவன் ஒருவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறுவனின் பெற்றோர் வெளியில் சென்ற நிலையில், தனது சகோதரனுடன் கிணற்றிற்கு அண்மையில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், தவறுதலாக உள்ளே விழுந்திருக்கலாம் என நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் முதிரம்பிட்டி பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் அலெக்சன் (வயது 7) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக நெடுங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்தவாரமும் வவுனியா கற்குளம் பகுதியில் 6 வயது சிறுவன் ஒருவனின் சடலம் கிணற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts