2019ஆம் ஆண்டில் 20 ஆயிரம் பட்டதாரிகளை அரச சேவைக்குள் இணைக்கும் முன்மொழிவு வரவு – செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் வரைவு வரும் மார்ச் 5ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுகிறது. நிதி அமைச்சர் மங்கள சமரவீர, வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை சபையில் முன்வைத்து உரையாற்றுவார்.
இந்த முன்மொழிவுகளில் 20 ஆயிரம் பட்டதாரிகளை அரச சேவைக்குள் இணைக்கும் முன்மொழிவும் உள்ளது என நிதி அமைச்சைச் சுட்டிக்காட்டி அரச வானொலி செய்தி வெளியிட்டது.
நாடுமுழுவதுமுள்ள 57 ஆயிரம் பட்டதாரிகளையும் ஒரே தடவையில் எந்தொரு நிகந்தனையுமின்றி அரச சேவைக்குள் உள்ளீர்க்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜக்ச அரசிடம் வலியுறுத்தி நிலையில் இந்த விடயத்தை நிதி அமைச்சு வெளிப்படுத்தி உள்ளது.