தாதிய உத்தியோகத்தரின் உயிரிழப்பில் மர்மம்!

பருத்தித்துறை மந்திகை ஆதார வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தரான கர்ப்பிணிப் பெண் ஊசி மருந்து ஏற்றி உயிரிந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். எனினும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது ஊசி மருந்து அவரது உயிரிழப்புக் காரணமா? என்று கண்டறியப்படவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

மந்திகை ஆதார வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தராகப் பணிபுரியும் திருமதி குலதீபன் பிருந்தா ( வயது 32 ) என்ற 4 வயது பிள்ளையின் தாய் ஒருவரே இவ்வாறு உயிரை மாய்த்தார்.

“தாதிய உத்தியோகத்தர் அண்மைக்காலமாக தீவிர வாந்திபேதியால் பாதிக்கப்பட்டிருந்ததார். இதற்காக கையில் ஊசி ஒன்றினை ஏற்றிஅவர் தனக்கு சிகிச்சைப் பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில் நேற்று காலை கடமைக்கு வந்த தாதி பிற்பகல் 1 மணியளவில் கடமை முடிந்து வீடு சென்றுள்ளார். அங்கு தனது 4 வயது பிள்ளையுடனும் கணவருடனும் சாதாரணமாகவே கதைத்து விட்டு குளியல் அறை சென்றுள்ளார். பின்னர் சாப்பிட்டு உறங்கியதாக தெரியவருகின்றது.

பிற்பகல் 2.15 மணியளவில் அவர் கணவரால் இறந்த நிலையில் மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரிற்கு தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இறந்தவரின் உடலம் மந்திகை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தாதி உத்தியோகத்தர் சத்திரசிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு பயன்படுத்தப்படும் ஊசி மற்றும் மருந்தைப் பயன்படுத்துவதற்கும் அதனை வீட்டுக்கு எடுத்தச் செல்ல எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது எனவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தாதி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வீட்டில் வைத்து மருந்தை பயன்படுத்தியதால் உயிரிழந்தாரா என்று பல்வேறு கோணங்களில் வீசாரணைகள் இடம்பெறுவதாக தெரியவருகின்றது.

Related Posts