மாகாண சபைத் தேர்தலை நடத்தவில்லை என்றால் தான் இராஜினாமா செய்யவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணையகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அந்தவகையில் எதிர்வரும் நவம்பர்10 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்த முன்வர வேண்டும் என்றும் இல்லையெனில் தான் இராஜினாமா செய்யவுள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
அத்தோடு தேர்தல் தள்ளிவைப்பது என்பது ஊழல் நிறைந்த தேர்தலை நடத்துவது போல் மோசமானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.