நாட்டைப் பிரிக்கும் எண்ணம் யாழ்ப்பாண மக்களிடம் இல்லை – அஸ்கிரிய பீட மகாநாயக்கர் தெரிவிப்பு

யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு நாட்டைப் பிரிக்கும் எண்ணம் இல்லை என்று அஸ்கிரிய பீட மகாநாயக்கர் வரக்காகொட ஞானரத்ன தேரர் தெரிவித்தார்.

“நான் யாழ்ப்பாணம் சென்றிருந்த போது, அங்குள்ள மக்கள் இலங்கைக்குள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்றே கோரினார்கள். நாட்டைப் பிரிக்கும் எண்ணம் தமக்கில்லை என அவர்கள் குறிப்பிட்டனர்.

அரசியலமைப்பு மறுசீரமைப்பைவிட நாட்டு மக்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு அவசியமாகும்” என்றும் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரக்காகொட ஞானரத்ன ​தேரர் குறிப்பிட்டார்.

பூகோள இலங்கை மன்றத்தினர் மகாநாயக்க தேரரை சந்தித்தபோது அவர் இந்த கருத்தினைக் அவர் வெளியிட்டார்.

Related Posts