இந்து ஆலயங்களைப் புனித பிரதேசமாக்க விரைவில் அமைச்சரவைப் பத்திரம்: அமைச்சர் மனோ

புகழ்பெற்ற இந்து ஆலயங்களைப் புனித பிரதேசமாக்க விரைவில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படுமென அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மன்னார் திருகேதிஸ்வர ஆலயத்திற்கநேற்று (புதன்கிழமை) காலை விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அங்கு இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“திருக்கேதிஸ்வர பகுதிக்குச் சொந்தமான இதுவரை கையளிக்கப்படாத காணிகள் அனைத்தையும் மக்களின் பாவனைக்கும் ஆலயத்தின் பாவனைக்கும் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கவுள்ளேன்.

அத்துடன் குறித்த அமைச்சரவைப் பத்திரத்தினை சமர்ப்பிக்கும் போது அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் மக்கள் பிரதிநிதிகளும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

எனவே குறித்த தரப்பினர் ஆதரவு வழங்கினால் என்னால் மேற்கொண்டு புகழ் பெற்ற இந்து ஆலயங்களைப் புனித பிரதேசமாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியும்” என அமைச்சர் மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டார்.

Related Posts