போர்க்குற்றம்சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவ பிரதானியாக நியமனம்!

போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய அதிகாரியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத்தின் பிரதான அதிகாரியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்படார்.

இறுதிக்கட்டப் போரில் 58 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர் என்று மனித உரிமை அமைப்புகளால் குற்றம்சாட்டப்பட்டு வருபவராவார்.

2017ஆம் ஆண்டு கஜபா படைப்பிரிவின் தலைமை கட்டளை அதிகாரியாக அவருக்கு நியமனம் வழங்கப்பட்டமையானது, சர்வதேச மட்டத்தில் கடுமையான சர்ச்சைகளையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் அவருக்கு இராணுவத் தளபதிக்கு அடுத்த நிலையிலான இராணுவத்தின் பிரதான அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு பதவி உயர்வு வழங்கி ஜனாதிபதி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அதில் உங்கள் அனுபவம் மற்றும் தலைமைத்துவம் பாதுகாப்புப் படைகளுக்கு வலிமையையும் தைரியத்தையும் கொண்டு வருமென நான் நம்புகிறேன் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Related Posts