‘தமிழ் தேசிய பிரச்சினைக்கு ஜனநாயக வழிமுறைகளினூடாக தீர்வும், தமிழ் தலைமைகளின் வகிபாகமும்’ எனும் தொனிப்பொருளில் கருத்துக்களால் களமாடுவோம் எனும் அரசியல் கருத்தரங்கு யாழில் நடைபெறவுள்ளது.

யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் எதிர்வரும் சனிக்கிழமை மாலை 03 மணியளவில் குறித்த கருத்தரங்கு நடைபெறவுள்ளது.
கோப்பாய் ஆசிரியர் கலாசாலை பிரதி அதிபர் ச.லலீசன் தலைமையில் நடைபெறவுள்ள இக்கருத்தரங்கில், வல்வெட்டித்துறை சிவன் கோயில் பிரதம குரு பிரம்மஸ்ரீ ப.மனோகரக்குருக்கள், தென்னிந்திய திருச்சபை பேராயர் டேனியல் தியாகராஜா , யாழ்.பல்கலைகழக பொருளியல் பீட பேராசிரியர் கலாநிதி சு.சிவகுமார், யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி, மூத்த ஊடகவியலாளர் ந.வித்தியாதரன் ஆகியோர் கருத்துரை வழங்கவுள்ளனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் குறித்த கருத்துரைகளுக்கு பதிலுரை வழங்கவுள்ளார்.