ரணில் தரப்புக்கு த.தே. கூட்டமைப்பு எவ்வித அழுத்தத்தையும் பிரயோகிக்கவில்லை! ஹிருணிக்கா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பிரதமரைச் சந்தித்து சமஸ்டியையோ, அரசியலமைப்புக்கு முரணான வகையில் இலங்கையை இரண்டாக மூன்றாக பிரிப்பதையோ ஒருபோதும் கேட்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய நேரடி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்பில் தனது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கதைக்கும் கட்சி, அவர்கள் எந்த விதத்திலும் எங்களுக்கு அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை.

பிரதமரைச் சந்தித்து கூட்டமைப்பின் தலைவர் முரண்பாடான விடயங்களை கேட்கவில்லை.

2009ஆம் ஆண்டிலிருந்து சிறையில் உள்ள தமிழ் கைதிகளை விடுதலை செய்ய கேட்கின்றனர்.

குறித்த கைதிகள் குற்றமிழைத்திருப்பின் வழக்கினை தொடுத்து அவர்களை குற்றவாளிகளாக காணுமாறும், இல்லாவிடின் விடுதலை செய்யுமாறும் மனிதநேயமான விடயத்தினையே அவர்கள் கேட்கின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts