பல மாகாணங்களில் கடும் குளிர்: வானிலை அவதான நிலையம்

நாட்டின் பல மாகாணங்களில் தொடர்ச்சியாக கடும் குளிர் நிலவுவதற்கு அதிகம் வாய்ப்புவுள்ளதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

வானிலை அவதான நிலையம் நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் வடக்கு, வடமத்திய, மத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் நாட்களில் தொடர்ச்சியாக கடும் குளிர் நிலவுமென அந்நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை கடற்பிராந்தியங்களில் இன்று காற்றின் வேகம் அதிகரித்து வீசக்கூடுமெனவும் இதன்படி தென்கிழக்கு திசையின் ஊடாக செல்லும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30- 40 கிலோ மீற்றராக அமையுமெனவும் வானிலை அவதான நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

அதேபோன்று, மன்னார் முதல் புத்தளம்- கொழும்பு ஊடாக களுத்துறை வரையான கடற்கரைக்கு அப்பாலுள்ள கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 50- 60 கிலோ மீற்றராக அமையுமெனவும் அந்நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

ஆகையால் கடற்தொழில் புரியும் தொழிலாளர்கள், தங்களுடைய வேலைகளை அவதானத்துடன் மேற்கொள்ளுமாறு வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Posts