மதுபானசாலையை அகற்ற கோரி பருத்தித்துறையில் போராட்டம்!

பருத்தித்துறை நகர் பகுதியில் இயங்கும் மதுபானசாலையை அகற்ற கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பருத்தித்துறை நகரசபை உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் இணைந்து இன்று காலை 9:30 மணியளவில் பருத்தித்துறை பிரதேச செயலகம் முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றினை அமைதி வளியில் முன்னெடுத்துள்ளனர்.

பிரதேச செயலகம் முன் ஆரம்பித்த குறித்த கவன ஈர்ப்பு போராட்ட காரர்கள் பிரதேச செயலகத்திற்க்குள் சென்று பிரதேச செயலாளரிடம் குறித்த மதுபான சாலையை அகற்றக்கோரிய மகஜரை கையளித்தனர்.

போராட்ட காரர்களால் உரிமம் இல்லாத மதுபான சாலையை அகற்றுங்கள்,கட்டட அனுமதி இன்றிய மதுபான சாலையை அகற்றுங்கள்,வணக்கஸ்தலங்களுக்கு அருகிலுள்ள மதுபான சாலையை அகற்றுங்கள்,பாடசாலைகளுக்கு அருகிலுள்ள மதுபான சாலையை அகற்றுங்கள் உட்பட கவன ஈர்ப்பு போராட்ட காரர்கள் பாதாதையை ஏந்தியிருந்தனர்.

குறித்த போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் ப.சுரேஸ் குறித்த மதுபான சாலை இயங்குவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறித்த மதுபான சாலை உரிமையாளருக்கு சார்பாக செயற்படுவதாகவும்.தாம் முன்னர் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குறித்த மதுபான சாலை தொடர்பாக முறையிட்டபோது அது இயங்குவதற்க்கு எந்த தடையும் விதிக்க முடியாது என்று தெரிவித்திருக்கின்றார்.

இதனால்தான் தாம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மதுபான சாலை உரிமையாளருக்கு சார்பாக இருப்பதாக சந்தேகிப்பதாகவும் நகர சபை உறுப்பினர் ப.சுரேஸ் தெரிவித்தார்.

குறித்த மதுபான சாலைக்கு பருத்தித்துறை நகரசபை வியாபார உரிமம் வழங் வழக்கப்படாத நிலையில் குறித்த மதுபான சாலை உரிமையாளர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து உரிமம் கோரிவருவதாகவும் கடந்த ஏழு வருடங்களாக கட்டட அனுமதி, வியாபார அனுமதி இன்றி இயங்கி வருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பருத்தித்துறை நகரசபை உறப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

எனினும் கட்டட அனுமதி,வியாபார அனுமதி இன்றி இயங்கும் குறித்த மதுபான சாலை ஏழு வருடங்களாக இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

Related Posts