சுனாமி ஆழிப்பேரலையில் உயிரிழந்த உறவுகளின் 14ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று புதன்கிழமை காலை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த நினைவஞ்சலி நிகழ்வில் பிரதான சுடரை துணைவேந்தர் ஆர்.விக்னேஸ்வரன் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், ஊழியர் சங்கத்தினர் மற்றும் மாணவர்கள் தீபங்களை ஏற்றி ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களை அஞ்சலித்தனர்.