அரசாங்கத்திற்கு எதிராக யாழில் சுவரொட்டிகள்

வெளிநாட்டிலிருந்து கிடைக்கும் டாலர்களுக்காக சமாதானத்தை அழிக்க அனுமதிக்கப் போகிறோமா எனத் தெரிவித்து யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

எனினும் இச்சுவரொட்டிகள் யாரால் வெளியிடப்பட்டது அல்லது யாரால் ஒட்டப்பட்டன என்பது தொடர்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை

இதேவேளை பாடசாலை மாணவர்களின் சீருடையை இல்லாமல் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் அதிகார சூதாட்டத்திற்கு எதிராக அணி திரள்வோம் எனக்குறிப்பிடப்பட்டு இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தினாலும் யாழில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இவ்வாறு யாழ் நகர் உட்பட யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் இந்த இரண்டு சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளது.

Related Posts