போரின் பின்னர் அங்கக் குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளின் வீதம் வடக்கில் அதிகரிப்பு – ஜெய்ப்பூர் நிறுவனம்

வடக்கில் போரின் பின்னரான காலப் பகுதியில் உடல் அங்கக் குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறக்கும் வீதம் அதிகரித்து உள்ளதாக ஜெய்ப்பூர் நிறுவன வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

“போரின் பின்னரான கால பகுதியில் ஜெய்ப்பூர் நிறுவனத்தில் சுமார் 7 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பயன்பெற்று உள்ளனர். அவர்களுக்கு எமது நிறுவனத்தின் ஊடாக செயற்கை அவயங்கள் பொருத்தி உள்ளோம்.

போரின் பின்னரான கால பகுதியில் விபத்துக்கள் மூலம் அதிகளவானவர்கள் அவயங்களை இழந்த நிலையில் செயற்கை அவயங்களை எமது நிறுவனத்தின் ஊடாக பொருத்தியுள்ளனர். அதேவேளை நீரழிவு நோய் , முடக்கு வாதம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு அவயங்களை இழந்தவர்கள் . அவயங்களின் செயற்பாட்டை இழந்தவர்கள் பயன்பெற்று உள்ளனர்.

அத்துடன் போரின் பின்னரான கால பகுதியில் குழந்தைகள் பிறப்பிலையே அவயங்களை இழந்த நிலையிலும் , அவயங்கள் செயற்பாடாத நிலையிலும் பிறக்கின்றனர்.

அதற்கான காரணங்கள் இதுவரை ஆய்வுகளின் ஊடாக கண்டறியப்பட வில்லை. ஆனால் தாய்மார்கள் போருக்கு முகம் கொடுத்தமையால் , ஏற்பட்ட பாதிப்புக்களாக இருக்காலம் எனும் சந்தேகம் உள்ளது” என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஜெய்ப்பூர் நிறுவன அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Related Posts