வடக்கு மாகாணத்தில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையின் தென்கிழக்குத் திசையிலிருந்து வடக்கு நோக்கி நகர்வதால் இன்றிரவு தொடக்கம் 48 மணித்தியாலங்களுக்கு மழையுடனான காலநிலை நீடிக்கும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வடக்கில் 150 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் என்பதுடன் நாட்டின் ஏனைய மாவட்டங்களில் 100 மில்லிமீற்றர் மழையும் பதிவாகும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், காற்றின் வேகம் மணிக்கு 70 தொடக்கம் 80 கிலோ மீற்றர் வேகத்தில் காணப்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.