தமிழகத்தில் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ள கஜா புயல் தற்போது இலங்கையில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கையின் வடக்கு, வடமேற்கு திசையில் காங்கேசன் துறையிலிருந்து சுமார் 75 கிலோ மீற்றருக்கு அப்பால் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த கஜா புயல் அடுத்த 6 மணித்தியாலங்களுள் மேற்கு நோக்கி நகர்வதுடன் படிப்படியாக குறைவடையுமெனவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் 150 மில்லிமீற்றருக்கு அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் வாய்ப்புள்ளதாகவும் அந்நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அந்தவகையில் தற்போது யாழின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதனால் வடக்கு மாகாண பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.