நல்லூரில் பழமையான மரங்களை பாதுகாக்கத் தீர்மானம்!!

நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பழமை வாய்ந்த மரங்களை பாதுகாக்க வலியுறுத்தி சபையின் உப தவிசாளர் ஜெயன் பிரேரணை ஒன்றை சபையில் முன்மொழிந்தார்.

நல்லூர் பிரதேச சபையின் 8 ஆவது அமர்வு சபை மண்டபத்தில் தவிசாளர் தியாகமூர்த்தி தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது முன்வைக்கப்பட்ட இந்தப் பிரேரணை அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதன் ஊடாக சபையில் எல்லைக்குள் உள்ள பழமை வாய்ந்த மரங்களில் உள்ள குருவிச்சை,பாரிய கொப்புக்கள் போன்றவற்றை வெட்டி மரங்களை பாதுகாப்பது என தீர்மானிக்கப்பட்டது.

பழமை வாய்ந்த மரங்களில் பிரதேச சபையின் பராமரிப்பில் உள்ள மரம் என அடையாளப்படுத்தும் வகையில் பதாகைகளை வைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related Posts