வவுனியாவில் முகமூடி அணிந்த இளைஞர் குழுவொன்றினால் நடத்தப்பட்ட தாக்குதலில் தாயும், மகளும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வவுனியா, வேப்பங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு ஐந்து பேர் கொண்ட குழு உட்புகுந்து, அங்கிருந்த தாயையும், மகளையும் தாக்கியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து வீட்டிலிருந்த தொலைக்காட்சி, குளிர்சாதனப்பெட்டி, சலவை இயந்திரம், வீட்டின் யன்னல் கதவுகள், மோட்டார் சைக்கிள்கள் என்பவற்றையும் அடித்து உடைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா நெளுக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.