இராணுவ வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: இருவர் படுகாயம்!

வவுனியா தாண்டிக்குளத்தில் இராணுவ லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியதில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை வீரபுரத்தில் இருந்து ஒமந்தை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் தாண்டிக்குளம் பகுதியில் கொக்கெலிய முகாமில் இருந்து இராணுவத்தினரை ஏற்றி வந்த லொறியுடன் மோதியே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 25 வயதுடைய அன்ரனி யோகேஸ்வரன் அனுஸாந்தன், 18 வயதுடைய அனுஸாந்தன் பவித்திரா ஆகிய இருவரும் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த மோட்டார் சைக்கிளினை தாண்டிக்குளம் சந்தியில் கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிஸாரினால் சைகை செய்யப்பட்ட போதும் அதனை பொருட்படுத்தாமல் மோட்டார் சைக்கிள் சாரதி சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் வவுனியா பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related Posts