யாழ்ப்பாணத்தில் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த தாயார் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த வேளையில் அவர் உயிரிழந்துள்ளார்.
வேலணையைச் சேர்ந்த 32 வயதான 4 பிள்ளைகளின் தாயாரான விஜயகுமார் நிரோஜனி என்பவரே உயிரிழந்துள்ளார்.
பன்னீர்க்குடம் குருதியில் கலந்ததால் அவர் உயரிழந்ததாக வைத்தியசாலையின் மருத்துவ அறிக்கையில் தெரியவந்துள்ளது.
கர்ப்பிணித் தாய் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவர் பிற்பகல் 3 மணியளவில் இரண்டு ஆண் குழந்தைகள் பிரசவித்துள்ளார்.
இந்த நிலையில் தாயார் மாலை 4 மணியளவில் உயிரிழந்துள்ளார். தாயாரின் அமினி ஓடிக் திரவம் குருதியில் கலந்துகொண்டதால் இறப்பு ஏற்பட்டது என்று சட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடற்கூற்றுப் பரிசோதளையின் பின்னர் சடலம் நேற்றுத் திங்கட்கிழமை மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
உயிரிழந்த தாயாரின் இரட்டைக் குழந்தைகள் ஆரோக்கியமான நிலையில் உள்ளனர் என்று யாழ். போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.