லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிவரும் சுப்பர் ஸ்ரார் ரஜனிகாந்த நடிக்கும் 2.0 திரைப்படத்தின் ரீசர் வெளியீட்டு விழாவில் எதிர்வரும் 10 ஆம் திகதி யாழ்ப்பாணம் மாநகரசபை மைதானத்தில் நடைபெறுவதற்கான பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பிரமாண்ட நிகழ்வு இசை நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் நிகழ்வில் சுப்பர் ஸ்ரார் ரஜனிகாந்த பங்கேற்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 2.0 திரைப்படத்தில் பிரபலங்களான இயக்குநர் சங்கர், பாடலாசிரியர் வைரமுத்து, உள்ளிட்ட திரைப் பிரபலங்களையும், இசைப் பிரபலங்களையும் நிகழ்வில் பங்கேற்கச் செய்யும் இரகசிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
09 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறும் வீடு கையளிப்பு நிகழ்வில் பங்கேற்பதற்காகவே ரஜனிகாந் உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணம் வரவுள்ளதாக லைக்கா குழுமத்தின் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளபோதும் 10 ஆம் திகதி நடைபெறும் இசை நிகழ்வே பிரதான நிகழ்வு என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலவச நிகழ்வாக நடைபெறும் இந் நிகழ்விற்கான விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு இலங்கை அரச உயர்மட்டம் உறுதியளித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
