Ad Widget

குழந்தைகளை பயன்படுத்தி தற்கொலை குண்டு தாக்குதல்

நைஜீரியாவில் தாக்குதல்களில் ஈடுபடும் பெண் தற்கொலை குண்டுதாரிகள், தம் மீதான சந்தேகங்களை தவிர்த்துக் கொள்ளும் வகையில் தாக்குதல்களின் போது குழந்தைகளையும் தம்முடன் அழைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் மடகாலி நகரில் கடந்த 13ஆம் திகதி இரு பெண்கள் முன்னெடுத்த தற்கொலை குண்டு தாக்குதலில், குண்டுதாரிகளுடன் இரு குழந்தைகள் கொல்லப்பட்டதுடன், மேலும் நால்வரும் உயிரிழந்தனர்.

குறித்த குண்டுதாரிகள் இருவரும் குழந்தைகளுடன் வந்திருந்த நிலையில், அவர்கள் சாதாரண மக்கள் எனக் கருதி அதிகாரிகளினால் சோதனைக்கு உட்படுத்தப்படாமல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்னரும் தற்கொலை குண்டு தாக்குதல்களில் பெண்கள் ஈடுபடுவது வழமை என்ற போதிலும், தங்களது செயற்பாடுகளில் குழந்தைகளை ஈடுபடுத்தும் புதிய போக்கானது மிகுந்த அபாயகரமானது என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

நைஜீரியாவில் பரந்தளவில் முன்னெடுக்கப்பட்டுவரும் இவ்வாறான மோதல்களின் பின்னணியில் பொகோ ஹராம் கிளர்ச்சியாளர்களே தொடர்புபட்டிருப்பதான சந்தேகம் தொடர்ந்தும் வலுவடைந்து வருகிறது.

பொகோ ஹராம் கிளர்ச்சியாளர்களின் தற்கொலை குண்டு தாக்குதல்களில் இளம் பெண்கள் உட்பட பெண்களை ஈடுபடுத்தி வருகின்ற நிலையில், தற்போது புதிய உத்தியாக குழந்தைகளை ஈடுபடுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts