குளிருடன் கூடிய காலநிலை தொடரும்

நாட்டின் பல பாகங்களிலும் காலை மற்றும் இரவு வேளைகளில் குளிரான காலநிலையுடன் கூடிய காலநிலை தொடர்ந்து நீடிக்குமென்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதிகாலை நேரங்களில், நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் உறைபனி காணப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்கு, சப்ரகமுவ மாகாணம், தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில், குறிப்பாக காலை வேளைகளில் பனிமூட்டம் காணப்படும் என்று திணைக்களம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related Posts