கல்வி அமைச்சின் முன் அதிபர்கள் போராட்டம்

வடமாகாணத்தில் அதிபர் தரத்தில் சித்தி அடைந்து பாடசாலைகள் கிடைக்கப்பெற்று ஆனால் பாடசாலைகளை பொறுப்பேற்க அனுமதி கிடைக்காத 98 அதிபர்கள், வடமாகாண கல்வி அமைச்சின் முன், புதன்கிழமை (28) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்போது, போராட்டத்தில் ஈடுபட்ட அதிபர்களை சந்தித்த வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன், கலந்துரையாடினார். இதனையடுத்து, வடமாகாண கல்வி அமைச்சருடன் கலந்துரையாடிய அமைச்சின் செயலாளர், எதிர்வரும் 2 ஆம் திகதி உரிய பாடசாலைகளை பொறுப்பேற்குமாறு வடமாகாண கல்வி அமைச்சர் தெரிவித்ததாக அதிபர்களிடம் கூறினார்.

இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிபர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.

Related Posts