முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க இன்று காலமானார் . இறக்கும்பொழுது இவருக்கு 83 வயது.
சுகயீனம் காரணமாக இவர் கடந்த 21ம் திகதி தனியார் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்ட்டிருந்தார்.
2000ம் ஆண்டிலிருந்து 2001ம் ஆண்டுவரையிலும் 2005 ம்ஆண்டிலிருந்து 2010 ம் ஆண்டு வரையிலும் இவர் பிரதமராக பதவியிலிருந்தார்.
ரட்ணசிறி விக்ரமநாயக்க மில்லிவேவ ஆரம்ப பாடசாலையிலும் ,தர்மபால வித்தியாலய பன்னிப்பிட்டி, ஹாட்லிக் கல்லூரி பருத்தித்துறையிலும் , ஆனாந்தாக்கல்லூரியிலும் கல்வி பயின்றவர் ஆவார்.
இவரது சகோதரர் முனிதாசவின் மறைவிற்கு பின்னர் மேல் மாகாணத்தில் ஹொரண பகுதியில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தார். 1962 ம்ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து கொண்ட அவர் அக்கட்சியின் 60 வருடகாலமாக அங்கத்தவராக செயல்படட்டு வந்தார்.
