யாழில் நூல் வெளியீட்டாளர்களுக்கு கருத்தரங்கு!

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினரால் எழுத்தாளர்களிற்கான கருத்தரங்கு யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கொழும்பிலுள்ள தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் தலைவர் மகிர அரவிந்த , தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் உத்தியோகத்தரான சீ.எம். சபீக், எம்.எஸ்.எம். சிகாம் பங்குபற்றி நூல்கள் எழுதுதல், வெளியிடுதல் தொடர்பில் கலந்துடையாடலை மேற்கொண்டனர்.

இதில் யாழ். மாவட்டத்தை சேர்ந்த நூல் வெளியீட்டாளர்கள், நூல் ஆசிரியர்கள் என 62 பேர் கருத்தரங்கில் பங்குபற்றினர்.

இந்நிகழ்வு நேற்று காலை 9.30 மணியளவில் தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் தலைவர் மகிர அரவிந்தவின் வரவேற்புரையுடன் ஆரம்பமானது.

இதில் தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் உத்தியோகத்தர்களான சீ.எம். சபீக், எம்.எஸ்.எம். சிகாம் போன்றோர் கருத்தரங்கினை நடாத்தியதோடு யாழ். மாவட்ட நூல் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டனர்.

Related Posts