இளவாலை பகுதியில் பற்றை ஒன்றுக்குள் இருந்து அழுகிய நிலையில் சடலம் ஒன்றை இளவாலை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்த சுதுகல தேவகே குணசேன என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த பற்றைக்குள் அழுகிய நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதை அவதானித்த பொதுமக்கள் இளவாலை பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தின் பதில் நீதிவான் தம்பிமுத்து மரண விராசணைகளை மேற்கொண்டதன் பின்னர் சடலம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதேவேளை சடலத்தின் சட்டை பையில் இருந்து தொலைபேசி இலக்கம் ஒன்று மீட்கப்பட்டு, அந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டபோது சடலமாக மீட்கப்பட்ட நபர் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்த சுதுகல தேவககே குணசேன என அடையாளம் காணப் பட்டுள்ளதுடன் இந்த நபர் வழிபோக்கர் எனவும் தெரியவந்துள்ளது.