21 அகதிகள் நாட்டை வந்தடைந்தனர்

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் 21 பேர் யு. என். எச். சி. ஆர் அமைப்பினால் நேற்று செவ்வாய்க்கிழமை (22) காலை 10 மணிக்கு, விமான மூலம் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இவர்கள் வவுனியா, மன்னார், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் கடந்த 1990ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்த சூழ்நிலையில் இடம்பெயர்ந்துவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts