வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 107 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

2017 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 107 மேலதிக வாக்குகளால் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதத்தின் இறுதி நாளான நேற்று (18) மாலை வாக்கெடுப்பு இடம்பெற்றது.

162 பேர் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர் . எதிராக 55 பேர் வாக்களித்தனர்.

இணக்கப்பாட்டு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐ.தே.க, ஸ்ரீ லங்கா சுதந்திக்கட்சி ஆகியவற்றுடன் எதிர்க்கட்சியான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகம் தொண்டமான், முத்து சிவலிங்கம், டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
ஜே.வி.பி மற்றும் கூட்டு எதிர்க்கட்சியினர் வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களினர்.

Related Posts