அமெரிக்காவின் புதிய ஜனாதிபதிக்கு இலங்கைத் தலைவர்கள் வாழ்த்து

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப்பிற்கு, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் ஜனாதிபதி தனது வாழ்த்தினை பதிவு செய்துள்ளார்.

இதேவேளை, டொனால்ட் ட்ரம்ப்பிற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தனது வாழ்த்தினை கூறியுள்ளார்.

அத்துடன், இலங்கை அரசாங்கம் அவருடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளதாகவும் ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பேஸ்புக் மூலம் டொனால்ட் ட்ரம்ப்பிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Related Posts