இலங்கையில் வேலையற்றோர் வீதம் அதிகரித்துள்ளது!

இலங்கையில் வேலையற்றோர் வீதம் கடந்த ஆண்டிலிருந்து அதிகரித்துவருகின்றது. அந்த வகையில் அண்மையில் வடக்கு மாகாண சபையால் கோரப்பட்ட பணிய உதவியாளர் வெற்றிடத்திற்கு 250 பட்டதாரிகளும் விண்ணப்பித்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

வடக்கு மாகாணத்தில் பணியக உதவியாளர் வெற்றிடத்தை நிரப்புவதற்காக 40பேர் தேவைப்பட்டனர். இதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டபோது இப்பதவிக்கு 9,460பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 250 பேர் பட்டதாரிகளாவர்.

இவ்வாறு விண்ணப்பித்த பட்டதாரிகளில் ஒருவர் விசேட பொருளியல் பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் 2014ஆம் ஆண்டு வேலையற்றோர் வீதம் 4.3வீதமாக இருந்தது. கடந்த ஆண்டிலிருந்து இத்தொகை 4.6ஆக அதிரித்துக் காணப்பட்டது என இலங்கை மத்தியவங்கியினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

Related Posts