நிறைவேற்றுக் குழுவின் தலைவராக, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமத்திபாலவை தெரிவு செய்தவற்கான முன்மொழிவினை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) ஏற்றுக்கொண்டுள்ளது.
இது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவித்தலை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
டுபாயில் அமைந்துள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைமையகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் திலங்க சுத்திபால பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.