குடும்பத்தகராறு: மனைவி தீக்குளித்து மரணம்!! கணவரின் நிலை கவலைக்கிடம்!!!

மனைவி தீக்குளித்த போது, அத்தீயை அணைப்பதற்கு முயற்சி செய்த கணவனும் தீயில் எரிந்த பின்னர், இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மனைவி சிகிச்சை பலனின்றி புதன்கிழமை (20) உயிரிழந்துள்ளதாக யாழப்பாணம் போதான வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மண்டைதீவு 3ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த யோசப் அன்ரனி மரியம்மா (வயது 30) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மதுபோதையில் கடந்த 17ஆம் திகதி வீட்டுக்கு சென்ற கணவன், மனைவியுடன் சண்டையிட்டுள்ளார்.

இதன்போது, மனைவி தீக்குளித்துள்ளார். மனைவியை காப்பாற்ற முயற்சி செய்த கணவன் மீதும் தீ பரவியுள்ளது. ஆபத்தான நிலையில் இருவரும் ஊர்காவற்றுறை பொலிஸாரால், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் மனைவி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். கணவரின் நிலையும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விருவருக்கும் 3 பிள்ளைகள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts