புலிகள் மீண்டும் தாக்குதலுக்கு தயாராகின்றனர்!

சாவகச்சேரி மற்றும் மன்னார் ஆகிய பிரதேசங்களில் கண்டெடுக்கப்பட்ட தற்கொலை அங்கி, ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் என்பன, புலிகள் மீண்டும் பயங்கரவாத தாக்குதலுக்கு தயாராவதை உணர்த்துகின்றதென கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் தென்னிலங்கையிலும் வெளிநாடுகளிலும் தஞ்சமடைந்துள்ள புலி உறுப்பினர்கள் மூலம், மீண்டும் நாட்டில் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவர்களின் இலக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாவுமே என குறிப்பிட்டுள்ள தயான், மேற்கத்தேய நாடுகளின் நண்பனான அரசாங்கத்திற்கு எவ்வித ஆபத்தும் இல்லையென குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் வடக்கு கிழக்கில் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதாகவும், தற்போது அந்த பாதுகாப்பில் ஓட்டை விழுந்துள்ளதாகவும் தயான் ஜயதிலக மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பு குறித்து இவ்வாறு பல கருத்துக்கள் தொடர்ந்தும் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், தேசிய பாதுகாப்பு குறித்த விசேட சந்திப்பொன்று இன்னும் ஓரிரு தினங்களில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முப்படைத் தளபதிகளுக்கிடையில் நடைபெறவுள்ளதாக அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts