வடக்குக் கிழக்கு இணைப்பு முஸ்லிம்களுக்குத் தேவையில்லை!

வடக்குக் கிழக்கு ஒன்றாக இணைக்கவேண்டும் என்ற தேவை முஸ்லிம் மக்களுக்கு இல்லையென விளையாட்டுத்துறை பிரதிஅமைச்சர் எச்.எம்.எம்.ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கல்முனைப் பகுதியில் அமைந்துள்ள சாஹிராக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையினரால் முன்வைக்கப்பட்ட தீர்வுத்திட்ட யோசனையானது முஸ்லிம் மக்களை ஒருபோதும் திருப்திப்படுத்தாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இனப்பிரச்சனைக்கு தீர்வுகாணும் விடயத்தில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் குந்தகம் விளைவிக்கும் நோக்குடன் செயற்படாது எனவும் தெரிவித்துள்ளார்.

Related Posts