சாவகச்சேரி தற்கொலை அங்கி மீட்பு ; மற்றுமொருவர் கைது

சாவகச்சேரியில் தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடி பொருட்கள் மீட்க்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி திருவையாறு பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 23 வயதுடைய விஜயகுமார் கேதீஸ்வன் என்ற நபரே பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரியில் தற்கொலை அங்கி மீட்கப்பட்ட சம்பவத்துடன் ஏற்கனவே கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபருடன், குறித்த நபர் பல்வேறு வழிகளில் தொடர்புகளை பேணியவர் என முதற்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபரிடம் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Posts